குறிப்பிட்ட எல்லை வரையில் அணுசக்தி மோதலில் உலகின் முன்னணி நாடுகள் நேரடியாக ஈடுபடும்
இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அணு ஆயுதப் போருக்கான கட்டாயத்தை ஏற்படுத்தும்
முக்கிய கட்டத்தில் அணு ஆயுங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்பதை புறக்கணித்துவிட முடியாது என உக்ரைன் இராணுவ தளபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சூழல் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அணு ஆயுதப் போருக்கான கட்டாயத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
@reuters
உக்ரைன் இராணுவ தளபதியான Valeriy Zaluzhnyi தெரிவிக்கையில், சில சூழ்நிலைகளில், ரஷ்ய ஆயுதப் படைகளால் தந்திரமாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நேரடி அச்சுறுத்தல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஒரு குறிப்பிட்ட எல்லை வரையில் அணுசக்தி மோதலில் உலகின் முன்னணி நாடுகள் நேரடியாக ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளை முற்றிலுமாக நிராகரிக்கவும் முடியாது எனவும் தளபதி Valeriy Zaluzhnyi தெரிவித்துள்ளார்.
@Wikimedia
ரஷ்யாவின் கண்மூடித்தனமான செயற்பாடுகளால் ஏற்கனவே மூன்றாம் உலகப் போருக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன என்றார்.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு வழங்கலை ரஷ்யா மொத்தமாக நிறுத்தியிருந்தது.
இதனால் ஐரோப்பிய நாடுகள் எதிர்வரும் குளிர் காலத்தை எவ்வாறு சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மட்டுமின்றி, ரஷ்ய எண்ணெய் மீதான விலை வரம்பை நாங்கள் முடிவு செய்வோம் என ஜி7 நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.