பேஸ்புக் நட்பு காதலாக மாறியது செக் குடியரசு பெண்ணுடன் திருமங்கலம் வாலிபர் திருமணம்: ராமேஸ்வரம் கோயிலில் நடந்தது

ராமேஸ்வரம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் காளிதாஸ். ஐரோப்பாவின்  செக் குடியரசில் உள்ள கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அங்கு இவருக்கும் ஹானா பொம்க்லொவா என்ற இளம்பெண்ணுக்கும் 2019ல் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் காதலர்களாக மாறினர். இதன்பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.  இதற்கு இருவரது பெற்றோர் தரப்பிலும் அனுமதி கிடைத்தது. இதை தொடர்ந்து இந்து முறைப்படி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உபகோயிலான பத்ரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக பெண் போல் பட்டுச்சேலை அணிந்து ஹானா பொம்க்லொவா அமர்ந்திருக்க, பட்டு வேஷ்டி, சட்டையில் காளிதாஸ் தாலி கட்டினார். மணப்பெண் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராக இருந்ததால் இந்துக்களின் கலாச்சாரப்படி ராமேஸ்வரம் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக காளிதாஸ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.