மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளரை கைது செய்தனர்.
சென்னை , ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டியராஜ். இவர் மாநகர காவல்துறையினர் விஐபிகளுக்கு பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கணவனை பிரிந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி 13 வயது அப்போது அந்த சிறுமிக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
பல முறை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். அந்த சிறுமி கல்லூரி முதலாமாண்டு படித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அவரிடம் மீண்டும் பாலியல் உறவுக்கு வருமாறு தொடர் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.