பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பல நடுத்தர குடும்பங்களிலும் உள்ள ஒரு கவனிக்க வேண்டிய விஷயம், சம்பளம் வந்தால் அடுத்த சில நாட்களிலேயே செலவுக்கு திண்டாடுவது தான். இதற்கு காரணம் செலவுகள் அதிகரிப்பு தான்
பணம் கையில் இருக்கும்போது எதற்காக செலவு செய்கிறோம் என யோசிக்காமல் செலவு செய்திடுவோம். அதற்கு பிறகு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
நம்மில் பலரும் பட்ஜெட் போட்டு செய்வதில்லை. ஆக நாம் இன்று பார்க்கவிருப்பது பட்ஜெட் விதி 50/30/20 என்பது பற்றி தான்.
மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா?

அதென்ன 50/30/20 பட்ஜெட் விதி?
50/30/20 பட்ஜெட் விதியை பொறுத்த வரையில், 50 என்பது உங்களது அடிப்படை தேவைக்காக ஒதுக்க வேண்டும். அதாவது அத்தியாவசிய தேவைகள், வீடு, ஹெல்த்கேர், கல்வி கட்டணம் என வைத்துக் கொள்வோம்.
30 என்பது வேண்டும் என்பதில் தான் கார், ஷாப்பிங், ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது, பொழுதுபோக்குக்காக போன்ற விருப்பமானவற்றிற்காக ஒதுக்கீடு செய்யலாம்.
20 என்பதை கட்டாயம் சேமிப்பு அல்லது எதிர்காலத்திற்கான முதலீடாக இருக்க வேண்டும். இது தான் 50/30/20 என்ற பட்ஜெட் விதியாகும்.

எளிதாக நிர்வாகம்
இந்த 50/30/20 பட்ஜெட் விதி மூலம் ஒருவர் எளிதாக தனது வருமானத்தை வெற்றிகரமாகவும், எளிதாகவும் நிர்வகிக்க முடியும். இந்த விதி மூலம் உங்களது வருமானத்தை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். இதில் எதற்கு எவ்வளவு விகிதம் என்பதை திட்டமிடுங்கள்.

50% அடிப்படை தேவைகள்
பொதுவாக தவிர்க்க முடியாத செலவுகள் அனைத்துமே இந்த பிரிவின் கீழ் வந்து விடும். இதற்காக உங்கள் வருமானத்தில் 50% ஒதுக்கீடினை செய்யுங்கள். உதாரணத்திற்கு 30,000 ரூபாய் சம்பளம் என வைத்துக் கொள்வோம். 30 ஆயிரம் ரூபாயில் 50%-த்தினை அதாவது 15,000 ரூபாயினை உங்களது வீட்டு வாடகை, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், கல்வி, வாகன பராமரிப்பு, மொபைல் கட்டணம், மளிகை, ஹெல்த், கல்வி உள்ளிட்ட கட்டணங்களுக்காக ஒதுக்க வேண்டும். இதில் முடிந்த அளவுக்கு சேமித்தாலும், அதன் மூலம் செலவினை நிர்வகிக்க முடியும்.

30% விருப்பமானவைகள்
பொதுவாக இந்த வகையான செலவுகள் கட்டாயம் செய்து ஆக வேண்டிய நிலை இல்லை. எனினும் மகிழ்ச்சிகாகவும், ஆசைக்காகவும் செலவழிக்கலாம். உதாரணத்திற்கு பிடித்த படம், சுற்றுலா, உணவகம் செல்வது, ஸ்மார்ட்போன், பிடித்த ஆடைகள், நகைகள் என வாங்குவது. இதற்காக உங்களது சம்பளத்தில் 9000 ரூபாயினை ஒதுகீடு செய்யலாம். எனினும் இதில் பெரும்பகுதியினை மிச்ச படுத்த முடியும்.

20% எதிர்காலத்திற்காக?
பெரும்பாலானவர்கள் கோட்டை விடுவது இதில் தான். வருவது வரட்டும் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என இருப்பார்கள். ஆனால் கடைசி நேரத்தில் போதிய நிதியின்றி தவிக்கலாம். பொதுவாக மருத்துவம், கல்வி போன்றவை அத்தியாவசிய செலவில் வந்தாலும், பெரியளவிலான செலவுகள் எனும்போது அதனை செய்ய முடியாது. ஆக இதுபோன்ற சேமிப்புகள் முதலீடு இருந்தால் தான் அதனை சரியாக எதிர்கொள்ள முடியும்.

கட்டாயம் முதலீடு செய்யணும்
20%ல் கட்டாயம் இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், வங்கி டெபாசிட், ஆர்டி, சேமிப்பு திட்டங்கள், சிறு சேமிப்பு திட்டங்கள் என கண்டிப்பாக முதலீட்டினை தொடங்கலாம் அல்லது சேமிக்கலாம். இதன் மூலம் உங்கள் எதிர்கால திட்டங்களுக்காக சேமிக்க முடியும். உதாரணத்திற்கு மகனின் கல்லூரி கனவு, வீடு கட்டுவது அல்லது வாங்குவது இதுபோன்ற சமயங்களில் இது பயனுள்ளதாக இருக்கும்.
What is the 50/30/20 Budgeting Rule? How does it work?
What is the 50/30/20 Budgeting Rule? How does it work?/அதென்ன 50/30/20 பட்ஜெட் விதி.. உங்க செலவு, சேமிப்பு எப்படி இருக்கணும்?