இலங்கை அமைச்சரவை விரிவாக்கம்37 இணை அமைச்சர்கள் பொறுப்பேற்பு| Dinamalar

கொழும்பு:இலங்கை அமைச்சரவையில் புதிதாக 37 பேர் இணை அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர்.

நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப் படும் என அவர் தெரிவித்தார். கடந்த மாதம் அவர் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இலங்கை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக 37 பேர் இணை அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர். இதில், முன்னாள் அதிபர் கோத்தபயவின் உறவினர் சசீந்திரா ராஜபக்சே, நீர் பாசனத் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சரவை விரிவாக்கத்தில், ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தவிர, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின், இலங்கைசுதந்திர கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.