மும்பை: மும்பையின் பந்த்ரா பகுதியினை சேர்ந்த 47 வயதான பெண் ஒருவர், 2000 ரூபாய் மதிப்பிலான ஒயினை லோக்கல் ஷாப் ஒன்றில் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணிடம் 2,000 ரூபாய் மதிப்பிலான ஒயினுக்கு 3.80 லட்சம் ரூபாயினை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர் மோசடி கும்பல்.
இது குறித்து பாந்த்ரா போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.
8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் விராத் கோலி அனுஷ்கா ஷர்மா..!

ஓயின் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி
கார்ட்டர் சாலைக்கு அருகில் வசிக்கும் மும்பையை சேர்ந்த அந்த பெண், செப்டம்பர் 6ம் தேதி அன்று கூகுளில் தேடி பந்த்ரா அருகிலுள்ள பிங்கி ஒயின்ஸை அழைத்துள்ளார். அங்கு 2,000 ரூபாய் மதிப்பிலான ஒயினையும் ஆர்டர் செய்துள்ளார். இணைய மோசடி பற்றி பெரிதும் அறிந்திராத அந்த பெண், தன்னுடைய அறியாமல் பெரும் தொகையினையும் இழந்துள்ளார்.

போலியாக நடித்து ஏமாற்றம்
மோசடி செய்தவர் தன்னை ஓயின் ஷாப் ஊழியர் போல் காட்டிக் கொண்டு, அந்த பெண்ணிடம் தனிப்பட்ட வங்கி விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களையும் பெற்றுள்ளார். மேலும் பில் போட வேண்டும் என்பதகாக மோசடி செய்தவர் கேட்கவே, அந்த பெண்ணும் ஒரு முறை கடவுச்சொல்லை பகிர்ந்துள்ளார். இதன் பிறகு அந்த பெண்ணின் கணக்கில் இருந்து 3.80 லட்சம் ரூபாய் மோசடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏமாந்த பிறகு வழக்கு
வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்த பிறகு தான் தான் ஏமாந்ததும், அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின்னரே போலீசாரை நாடியுள்ளார். அந்த பெண்ணிடம் போலியாக நடித்து ஏமாற்றம் செய்த ஆசாமி, அவரிடம் போனில் தவறாக நடந்து கொண்டவர் என இருவரின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்தான விசாரணையும் நடைபெற்று வருகின்றது. பொதுவாக இதுபோன்ற சில சம்பவங்கள் இன்றும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

விழிப்புணர்வு இல்லை
இதுபோன்ற விழிப்புணர்வு இல்லாத நபர்கள் முடிந்த மட்டில் பணத்தினை கையில் வைத்தில் கொண்டு பரிவர்த்தனை செய்யலாம். அப்போது தான் இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க முடியும். அப்படியும் இல்லையேல் ஓடிபி மற்றும் உங்களது வங்கி விவரங்களை யாரிடமும் பகிராமல் இருப்பதே நல்லது.

கியூ ஆர் ஸ்கேன் மூலம் மோசடி
கடந்த ஏப்ரல் மாதத்தில் இதே போன்று மும்பையை சேர்ந்த ஒரு பெண், ஒயின் வாங்க கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்ய கோரி, அவரிடம் இருந்து 650 ரூபாய்க்காக, 4.80 லட்சம் ரூபாய் மோசடி செய்து ஏமாற்றப்பட்டார்.
A woman who ordered wine online was also cheated of Rs 3 lakh
A woman who ordered wine online was also cheated of Rs 3 lakh/ஒயின் ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்.. ஆன்லைன் மோசடியா?