ஒட்டன்சத்திரம்: மதுரையிலிருந்து 40 பயணிகளுடன் கோயம்புத்தூர் நோக்கி அரசு பஸ் நேற்று சென்றுகொண்டிருந்தது. பஸ்சை கோயம்புத்தூரைச் சேர்ந்த சிவக்குமார் ஓட்டினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் பஸ் சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த 12ம் வகுப்பு மாணவன் பிரவீன் (17) ஓட்டி வந்த டூவீலர், பஸ் முன்பகுதியில் மோதியது. இதில், டூவீலரின் பெட்ரோல் டேங்க் திறந்ததால் பஸ் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அவருடன் வந்த மாணவர்கள் ஆகாஷ், நரசிம்மன் இருவரும் காயமடைந்து, கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பஸ்சில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர்தப்பினர்.
