டெல்லி ராஜ பாதையில் முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. டெல்லி இந்தியா கேட் அருகே 28 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே பல்லாயிரக்கணக்கான பரப்பில் பசுமைப் புல்வெளியில் உருவாக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 28 அடி உயரமுள்ள இந்த சிலை நேதாஜியின் முப்பரிமாண சிலை அமைந்துள்ள அதே இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
சிலை திறப்பையொட்டி நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் நாளை முதல் வருகிற 11ம் தேதி வரை இரவு எட்டு மணிக்கு நடைபெற உள்ளது. இதனைப் பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது தான் சென்ட்ரல் விஸ்டா திட்டம்.
டெல்லி ராஜ பாதையில் முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் முழுமையாக மறு வடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின், சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையின் பெயர், கர்தவ்யா பாதை (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்பாதையின் இரு பக்கங்களிலும் பச்சைபசேலென புல்வெளி, வாகன நிறுத்துமிடம், மக்கள் அமர்ந்து இளைப்பாற நாற்காலிகள், கழிவறைகள், பல்வேறு உணவகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கர்தவ்யா பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.