வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்ற இரண்டாம் எலிசபெத். 96 உடல்நிலை மோசமான நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோல் அரண்மணையில் காலமானார்.
![]() |
இந்நிலையில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நிலை கடந்த அக்டோபர் மாதம் முதலே மோசமாக இருந்ததால் அவரது மகன் இளவரசர் சார்லஸ் தான் மகாராணியின் வேலைகளில் பெரும்பாலானவற்றைக் கவனித்து வந்தார்.
தற்போது இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து எலிசபெத் மகன் சார்லஸ் பிரிட்டன் அரசராக பொறுப்பேற்க உள்ளதாகவும், அவரது மனைவி கமீலா சார்லஸ் ராணியாக பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement