சென்னை: சியான் விக்ரம் இன்னமும் படு பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் அறிமுகப்படுத்திய அவரது வாரிசு துருவ் விக்ரமுக்கோ எந்தவொரு படமும் இப்போதைக்கு கைவசம் இல்லை போல..
முதல் படத்தையே இரு முறை நடித்து ரிலீஸ் செய்த நிலையில், இரண்டு படங்களும் சொதப்பின.
அப்பாவுடன் இணைந்து நடித்த மகான் படமும் ஓடிடியில் வெளியாகி அப்படியே அடங்கிப் போனது. இந்நிலையில், தனக்காக தானே இயக்குநராக மாறி விட்டார் துருவ் விக்ரம்.
கோப்ரா சொதப்பினாலும்
சியான் விக்ரம் சோலோ ஹீரோவாக நடித்த பல படங்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றன. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 20 நிமிடங்கள் வரை படத்தை கட் செய்தாலும், தியேட்டரில் அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், விக்ரமுக்கு ஏகப்பட்ட படங்கள் கைவசம் உள்ளன.

ஆதித்த கரிகாலன் வருகிறார்
கோப்ரா மிஸ் ஆன நிலையில், அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. ஆதித்த கரிகாலனாக டீசர் மற்றும் டிரைலரில் மிரட்டும் சியான் விக்ரம் படத்திலும் கண்டிப்பாக மெர்சல் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா ரஞ்சித் படம்
பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் கேஜிஎஃப் கதையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீரியட் படத்தில் நடித்து வருகிறார் சியான் விக்ரம். 3டியில் உருவாக உள்ள அந்த படம் மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் என சியான் விக்ரம் லைன் அப் சூப்பராகவே உள்ளது. ஆனால், அவரது மகன் துருவ் விக்ரமின் லைன் அப் ரொம்பவே வீக் ஆக உள்ளது.

லிப் லாக் மட்டும் தான் மிச்சம்
இயக்குநர் பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்து துருவ் விக்ரம் அறிமுகமாக நினைத்தார். ஆனால், பாலா அந்த படத்தை சரியாக எடுக்கவில்லை என பிரச்சனைகள் கிளம்பிய நிலையில், ஆதித்ய வர்மா எனும் படம் வெளியானது. அடுத்ததாக வர்மா படமும் ரிலீஸ் ஆனது.இரண்டு படங்களிலும் ஹீரோயின்களுக்கு மாறி மாறி லிப் லாக் கொடுத்தது மட்டும் தான் மிச்சம் எந்த படமும் சரியாக ஓடவில்லை.

அப்பாவுடன் இணைந்து
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பா விக்ரம் உடன் இணைந்து துருவ் விக்ரம் நடித்த மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. சியான் விக்ரம் ரசிகர்களை தவிர பலருக்கும் அந்த படம் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. கோப்ராவுக்கு பதில் மகான் படம் தியேட்டருக்கு வந்திருக்கலாம் என விக்ரம் ரசிகர்களும் கமெண்ட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநரான துருவ் விக்ரம்
மல்டி டேலண்ட் குழந்தையாகவே சியான் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமை வளர்த்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டிய படம் மாமன்னன் படத்தால் தாமதமாகி வரும் நிலையில், தனக்காக ஒரு ஆல்பம் பாடலை இயக்கி, பாடி நடித்துள்ளார் துருவ் விக்ரம். உஜ்வல் குப்தா அந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இங்கேயும் லிப் லாக்
மனசே எனும் பாடலின் ஆல்பம் வீடியோ விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் புரமோவை வெளியிட்டுள்ளார் துருவ் விக்ரம். காதல் ஆல்பமாக உருவாகி உள்ள இந்த பாடலிலும் அவர் லிப் லாக் கொடுப்பதை பார்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். வரும் செப்டம்பர் 22ம் தேதி முழு பாடல் வெளியாகிறது. துருவ் விக்ரம் நடிப்பில் சீக்கிரமே ஒரு தரமான படத்தை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.