காபுல்,
ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு தலிபான்கள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு தலிபான்களை ஒடுக்க அஷ்ரப் கனி ஆட்சி காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள், ராணுவ ஹெலிகாப்டர்களை தலிபான்கள் கைப்பற்றினர்.
இதனையடுத்து, தலிபான்கள் தங்களுக்கென பாதுகாப்பு படைகளை அமைத்துள்ளன. தலிபான்கள் அமைத்துள்ள பாதுகாப்புபடையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிளாக் வாக் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் பாதுகாப்பு படையில் இடம்பெற்றிருந்த குழுவினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் நடந்த பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.