ராணியாரின் இறுதிச் சடங்குகள்… ஜோ பைடனுக்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்: கசிந்த தகவல்


ராணியாரின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும்

ஜோ பைடன் அவரது மனைவி உள்ளிட்டவர்கள், பேருந்தில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்

ராணியாரின் இறுதிச்சடங்குகளின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேருந்தில் பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் கசிந்துள்ளது.

பிரித்தானிய ராணியாரின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணியாரின் இறுதிச் சடங்குகள்... ஜோ பைடனுக்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்: கசிந்த தகவல் | Queen Funeral Biden Takes Bus High Security

@ap

இதனையடுத்து, ஏற்கனவே முடிவு செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரித்தானியா வர உள்ளனர்.

ஆனால் பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு, ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டவர்கள், எஞ்சிய சிறப்பு விருந்தினர்களுடன் பேருந்தில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ராணியாரின் இறுதிச் சடங்குகள்... ஜோ பைடனுக்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்: கசிந்த தகவல் | Queen Funeral Biden Takes Bus High Security

@getty

பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவர இருப்பதால் limo வாகனங்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.

அவர்களின் உத்தியோகப்பூர்வ வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் விமானங்களில் பிரித்தானியா திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஹெலிகொப்டர் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணியாரின் இறுதிச் சடங்குகள்... ஜோ பைடனுக்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்: கசிந்த தகவல் | Queen Funeral Biden Takes Bus High Security

@pa

மேலும், அவர்களின் கார்களை மேற்கு லண்டனில் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தவும் கோரப்பட்டுள்ளனர்.
இதனிடையே, லண்டனில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர், ஜோ பைடன் பேருந்தில் பயணப்படுவாரா? நம்ப முடிகிறதா என தமது சகாக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் லண்டனில் பாதுகாப்பு பலப்படுத்துவதற்காக elite SAS துருப்புகளை களமிறக்கப்பட்டுள்ளதுடன், 10,000 பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ராணியாரின் இறுதிச் சடங்குகள்... ஜோ பைடனுக்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்: கசிந்த தகவல் | Queen Funeral Biden Takes Bus High Security

@ap

மொத்தம் 2,000 சிறப்பு விருந்தினர்கள் லண்டனில் இறுதிச் சடங்குகளுக்காக வர உள்ளனர்.
உலகத் தலைவர்களை பயணிகள் விமானத்திலேயே லண்டன் வர உள்விவகார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாக ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளது.

மேலும், தனிப்பட்ட விமானங்களில் வர விரும்பும் சிறப்பு விருந்தினர்களை சிறு விமான நிலையங்களில் தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காரணம் அந்த வாரம் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், இறுதிச் சடங்குகள் நடைபெறும் பகுதிக்கு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகொப்டர் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா நிர்வாகம் ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகம் என கூறுகின்றனர்.
ஜி7 உச்சி மாநாடுக்கு கலந்துகொள்ள வந்த ஜோ பைடன், இரண்டு மிகப்பெரிய லிமோ வாகனங்களுடன், 400 உளவுத்துறை அதிகாரிகள் புடைசூழ தரையிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.