எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெறுவதே தனது அடுத்த எதிர்பார்ப்பு என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவிக்கிறார்.
எட்டு வருடங்களுக்குப் பிறகு ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை தசுன் ஷானக தலைமையிலான இலங்கைக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளனர்..
டுபாய் விளையாட்டு மைதானத்தில் நேற்று (11) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெறுவது இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதைத் தீர்மானிக்கும் காரணியாகும் என்ற கிரிக்கெட் விமர்சனங்களின் பின்னணியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.
அதற்கிணங்க களத்திற்கு வந்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களை குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழக்கச் செய்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள், 20 ஓவர்களின் இறுதியில் இலங்கை அணி 6விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
ஆட்டமிழக்காமல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களைப் பெற்றதுடன் வனிந்து ஹஸரங்க 36ஓட்டங்களைப் பெற்று அவருடன் வேகமாகவும் சிறப்பாகவும் இணைந்து விளையாடினார்.
ஆரம்ப வீரர்களை பலப்படுத்தி தனன்ஜய டி சில்வா 28 ஓட்டங்களை 4 பௌண்டரிகளை அடித்து குவித்தார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி பெறும் என்ற சர்வதேச கணிப்புகளின் பிண்ணனியில் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
அத்துடன் புதிய வேகப்பந்து வீச்சாளர் பிரமோத் மதுஷான் 34 ஓட்டங்களைக் கொடுத்து 4விக்கட்டுக்களைக் கைப்பற்றியதுடன் சாமிக கருணாரத்ன 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இலங்கை அணியில் பிரபலமாக எதிர்பார்க்கப்படும் வனிந்து ஹஸரங்க வீசிய நான்காவது ஓவரில் 3விக்கட்டுக்களை கைப்பற்றினார். அவர் 27ஓட்டங்களை மாத்திரமே எதிரணிக்குக் கொடுத்திருந்தார்.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் இனிங்ஸிற்காக அதிக ஓட்டங்களாக ஆரம்ப வீரரான மொஹம்மத் ரிஸ்வான் 55 ஓட்டங்களைப் பெற்றதுடன் இப்திகார் அஹமட் அவருக்குத் துணையாக விளையாடி 32 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.
நேற்று (11) இலங்கை அணி சிறப்பாகக் களத்தடுப்பில் ஈடுபட்டமை குறித்து விளையாட்டு விமர்சகர்கள் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்கள்.
அத்துடன் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக பானுக ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.