நடிகை பத்மபிரியா நம்பரை தா..இல்லாவிட்டால்?..நெருங்கிய நண்பரின் வினோத மிரட்டல்..போலீஸ் திகைப்பு

நடிகை பத்மபிரியாவின் நம்பரைக்கேட்டு கேமரா மேனை மிரட்டிய இளைஞர் நம்பர் தராவிட்டால் உன் மனைவியை பலாத்காரம் செய்வேன் என மிரட்டியுள்ளார்.

நடிகையின் நம்பரைக்கேட்டு மிரட்டி, மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டும் இளைஞர் பற்றி கேமராமேன் அளித்த புகாரில் நண்பரை போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

16 வருடமா பழகிட்டு ஒரு போன் நம்பர் தராததற்கு இப்படியாடா மிரட்டுவாய் என போலீஸார் அவரை விசாரித்து வருகின்றனர்.

பத்ம பிரியாவை வைத்து ஷூட்டிங்

சென்னையை அடுத்த போரூரில் வசித்து வருபவர் பிரபு என்கிற லட்சுமி பிரபாகர்(52). இவரது நெருங்கிய நண்பராக கடந்த 16 ஆண்டுகளாக பழகி வருபவர் பிரபு. இவர் சமீபத்தில் சேரனின் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை பத்மபிரியவை வைத்து பாரதியார் பாடல் ஒன்றை படம் பிடித்துத்தரக்கேட்க லட்சுமி பிரபாகரும் ஒப்புக்கொண்டு பத்ம பிரியாவிடம் பேசி அவரை வைத்து பாராதியார் பாடலை எடுத்து தந்துள்ளார்.

 போக்கை மாற்றிய மாறிய நண்பர்

போக்கை மாற்றிய மாறிய நண்பர்

அதுமுதல் சூர்யாவின் போக்கு மாறியுள்ளது. பத்மபிரியாவின் நம்பர் வேண்டும் என லட்சுமி பிரபுவிடம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். தனக்கு தெரிந்த ஒரு பிரபலத்தின் நம்பரை அதுவும் நடிகை என்பதால் தந்தால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதால் நம்பரைக்கொடுக்காமல் தட்டி கழித்து வந்துள்ளார்.

 நடிகையின் நம்பரை தர மறுத்த கேமராமேன்

நடிகையின் நம்பரை தர மறுத்த கேமராமேன்

ஆனாலும் விடாமல் சூர்யா நம்பரைக்கேட்டு நச்சரித்துள்ளார், ஒரு கட்டத்தில் லட்சுமி பிரபாகர் தான் நம்பரை தரமுடியாது. எதுவாக இருந்தாலும், என்னிடம் சொல்லுங்கள். நான் அவர்களிடத்தில் தகவலை சொல்லி பதில் வாங்கி தருகிறேன் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா நீ நம்பர் தராவிட்டால் நான் என்ன செய்வேனென்றே எனக்கு தெரியாது என மிரட்ட ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து பிரபாகர் செல்போனுக்கு போன் செய்து ஆபாசமாக திட்டியுள்ளார்.

 தினமும் ஆபாச மெசேஜ், குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஆபாச பேச்சு

தினமும் ஆபாச மெசேஜ், குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஆபாச பேச்சு

தினமும் ஆபாசமாக திட்டி வந்த சூர்யா ஒரு கட்டத்தில் லட்சுமி பிரபாகரின் மனைவியையும் ஆபாசமாக திட்ட தொடங்கியுள்ளார். இதையடுத்து லட்சுமி பிரபாகர் ராமாபுரம் காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் அளித்துள்ளார். அதில் தன்னிடம் சூர்யா நடந்துக்கொண்ட விதத்தை கூறி , எனக்கு பத்ம பிரியாவின் போன் நம்பரை தராவிட்டால் உன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும், ஆபாசமாக பேசி வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறியுள்ளார். புகாரைப்பெற்ற போலீஸார் சிஎஸ்ஆர் கொடுத்துள்ளனர். சூர்யாவை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 16 ஆண்டு நட்பு இதுதானா?

16 ஆண்டு நட்பு இதுதானா?

16 ஆண்டுகள் பழகிய நண்பன் ஒரு நடிகையின் நம்பரை நம்பி தரக்கூடாதா என சூர்யாதரப்பிலும், ஒரு நடிகையின் நம்பரை தராவிட்டால் கண்டபடி குடும்பத்தில் உள்ளவர்களை எல்லாம் இழுத்து பேசுவதா? என பிரபாகர் தரப்பிலும் கூறியுள்ளதாக தெரிகிறது. ஒரு நம்பர் தராவிட்டால் 16 ஆண்டு நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்வேன்னு சொல்வியா அப்படியானால் என்ன எண்ணத்தில் நீ பழகி இருக்கிறாய் என போலீஸ் தரப்பில் கேட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் சூர்யா கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.