இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விபரத்தை இந்திய சுகாதார அமைச்சு இன்று(13) காலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 221-ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 4 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 39 இலட்சத்து 30 ஆயிரத்து 417 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 185 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை , இதுவரை 215 கோடியே 47 இலட்சத்து 80 ஆயிரத்து 693 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.