தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்!

இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் திண்டுக்கல்லில் கட்டப்பட்ட மறுவாழ்வு முகாம்

காணொளி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக மாவட்டம் திண்டுக்கல்லில் இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து, இலங்கை தமிழர்களுக்காக வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்! | Rehabilitation Camp For Srilankan Tamils Opened Tn

17.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.

தலா 300 சதுர அடியில் 321 குடியிருப்புகள் கட்டுப்பட்டுள்ள நிலையில் இவற்றில் நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பூங்கா ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்! | Rehabilitation Camp For Srilankan Tamils Opened Tn

இந்த மறுவாழ்வு முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.   

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்! | Rehabilitation Camp For Srilankan Tamils Opened Tn

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.