ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். பாம்பு மனிதர் என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் வினோத் திவாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை காடுகளுக்குள் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டதாக வினோத் திவாரிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அவர் அந்தப் பகுதிக்கு விரைந்தார். கடைக்குள் புகுந்து ராஜநாகத்தைப் பிடித்து, தான் கொண்டுவந்த பைக்குள் அடைத்து வைக்க வினோத் திவாரி முயன்றார்.
#Rajasthan | चुरु में सांप को पकड़ने आए विनोद तिवाड़ी को कोबरा ने काटा, कुछ ही मिनटों में हुई मौत, घटना हुई CCTV में कैद.#Snakeman #CobraBite #SnakeBite #ChuruDistrict #CCTVFootage #SardarShaharTown #Trending #abcnewsmedia #राजस्थान pic.twitter.com/HDjtJDsZMD
— Abcnews.media (@abcnewsmedia) September 13, 2022
அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக அவரைப் பாம்பு கையில் தீண்டிவிட்டது. ராஜநாகங்களுக்கு பொதுவாகவே விஷம் அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். அதனால், பாம்பு தீண்டிய சில நிமிடங்களிலேயே வினோத் பரிதாபமாக மரணமடைந்தார். இந்தச் சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அவருடைய இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.