தனுஷுடன் என்னை இணைத்த டைரக்டருக்கு நன்றி.. கேப்டன் மில்லரில் ஜாய்ன் ஆன சந்தீப் கிஷன்!

சென்னை :நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார்.

விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு கொடுத்து வருகிறது.

படத்தில் தனுஷின் கெட்டப்பும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நீண்ட தாடி, நீண்ட முடி சகிதம் இந்தப் படத்தின் கெட்டப் காணப்படுகிறது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். பக்கத்து வீட்டு பையன் லுக்கில் இருக்கும் ஹீரோக்களுக்கு நமது கோலிவுட் ரசிகர்கள் எப்போதுமே ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். அந்த வகையில் தனுஷை அடக்கலாம். ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது மோசமான விமர்சனங்களை பெற்ற தனுஷ், தொடர்ந்து தன்னுடைய நடிப்பு மற்றும் கெட்டப்பை மெருகேற்றிக் கொண்டார்.

கேரக்டர்களில் வித்தியாசம்

கேரக்டர்களில் வித்தியாசம்

நல்ல கதைக்களங்களுடன் இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. ஏராளமான ரசிகர்களையும் இவரது படங்கள் இவருக்கு பெற்றுத் தந்துள்ளன. கேங்ஸ்டர், வயதானவர் என தனது கேரக்டர்களில் வித்தியாசம் காட்டியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தனுஷ்.

அசுரன் படம்

அசுரன் படம்

அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் உள்ளிட்ட படங்கள் இவரை வெகு சிறப்பாக எடுத்துக் காட்டின. தொடர்ந்து ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி க்ரே மேன் என 4 படங்கள் தனுஷின் நடிப்பில் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து நானே வருவேன் படம் வரும் 29ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு தன்னுடைய அண்ணன் செல்வராகவனுடன் இணைந்துள்ளார் தனுஷ்.

கேப்டன் மில்லர் படம்

கேப்டன் மில்லர் படம்

இந்நிலையில் ராக்கி, சாணிக் காயிதம் போன்ற அழுத்தமான கதைக்களங்களில் படங்களைக் கொடுத்துள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு தற்போது அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

படத்தில் இணைந்த சந்தீப் கிஷன்

படத்தில் இணைந்த சந்தீப் கிஷன்

விரைவில் சூட்டிங் துவங்கவுள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், ஜான் கொக்கன் போன்றவர்களும் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது படத்தில் சந்தீப் கிஷன் படத்தில் இணைந்துள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து சந்தீப் கிஷனும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சந்தீப் கிஷன் நெகிழ்ச்சி

சந்தீப் கிஷன் நெகிழ்ச்சி

மாபெரும் நடிகரான தனுஷுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ள அருண் மாதேஸ்வரன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள நிலையில், பாடல்களும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகரம் படத்தின் ஹீரோ

மாநகரம் படத்தின் ஹீரோ

பிரபல தெலுங்கு நடிகரும் லோகேஷின் முதல் படமான மாநகரம் படத்தின் ஹீரோவுமான சந்தீப் கிஷன் கேப்டன் மில்லர் படத்தில் இணையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது தயாரிப்புத் தரப்பான சத்யஜோதி பிலிம்ஸ்.

விரைவில் சூட்டிங்

விரைவில் சூட்டிங்

படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் 21ம் தேதி பூஜையுடன் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் சந்தீப் கிஷனுக்கு மிகவும் வெயிட்டான ரோல் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து 120 நாட்கள் இந்தப் படத்தின் சூட்டிங் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.