சென்னை: நடிகர் அருண்விஜய், நடிகை பலக் லால்வானி, காளிவெங்கட் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் சினம்.
இத்திரைப்படத்தை நடிகர் விஜயகுமார் தயாரிக்க, இயக்குநர் குமரவேலன் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அருண்விஜய், இயக்குநர் குமரவேலன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
எதார்த்தமான போலீஸ் ரோல்
கேள்வி: சினம் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நாங்கள் சொந்தமாக தயாரித்த திரைப்படம் சினம். குற்றம் 23ல் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பேன். தமிழ் ராக்கர்சில் டிபார்ட்மென்ட் சார்ந்த ஒரு கதாபாத்திரம். எதைநோக்கி செல்கிறோம் என்பது குறித்த அளவிலான கதைக்களத்தில் நடித்திருந்தேன். சினம் படத்தில் பாரி வெங்கட் என்கின்ற எமோஷன் கலந்த எதார்த்தமான போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது என்றார்.

நடிகர் அருண்விஜய்க்கு காயம்
கேள்வி: மாஸ்டர் சில்வா, படத்தின் சண்டைக்காட்சிகள் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: சண்டைக்காட்சிகள் எதார்த்தம் என்று நான் கூற மாட்டேன். ஏனென்றால் கதாநாயகனை பீர்பாட்டிலால் தாக்கும்போது, கதாநாயகனுக்கும் காயங்கள் ஏற்படும். அந்த விதத்தில் நடிகர் அருண்விஜய்க்கும் பீர்பாட்டிலால் காயமும் ஏற்பட்டுள்ளது. (அப்பொழுது அருண்விஜய் தனது உடலில் உள்ள பீர்பாட்டில் தழும்பு, யானை தழும்பு, குற்றம் 23 தழும்பு, என்னை அறிந்தால் தழும்பு என அனைத்தையும் காட்டினார்). சினம் படத்தின் கதையானது எதார்த்தமான கதையாகும். அதாவது அற்புதமான குடும்பம், அற்புதமாக சமூகம் ஆகியவற்றில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை தான் படத்தில் காட்டியிருக்கிறோம். இப்படத்தில் சண்டைக்காட்சிகளும் அவ்வாறே அமைந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் நாயகன், சத்யா போன்ற படங்களில் சண்டைக்காட்சிகளை நீக்கி விட்டு படத்தை பார்க்க முடியாது. சண்டைக்காட்சிகளுடன் கதையும் செல்லும். அது போல் தான் இந்த படத்திலும் கதையை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் சண்டைக்காட்சி அமைத்துள்ளேன் என்றார்.

எனது மனைவிக்கு நன்றி
கேள்வி: அருண்விஜய், உங்கள் காஸ்ட்யூம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: என்னுடைய காஸ்ட்யூமை எனது மனைவி ஆர்த்தி தான் முழுவதும் கவனித்துக் கொண்டார். இயக்குநர் மற்றும் கேமராமேன் படத்திற்கு எந்த மாதிரியான காஸ்ட்யூம் வேண்டும் என்று ஆர்த்தியிடம் கூறினார்கள். அதாவது எதார்த்தமான கதாபாத்திரம், படத்திற்கு நல்ல பிரைட்டான கலர் போன்றவை வேண்டும் என்றனர். அது மாதிரியே அமைத்து கொடுத்தார். இந்த இடத்தில் அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன் என்றார்.
வருத்தம் தான்
கேள்வி: இயக்குநர் குமரவேலன், உங்கள் அப்பாவிற்கு சினம் படத்தை போட்டு காட்டீனீர்களா?
பதில்: சினம் படத்தை அப்பா பார்க்கவில்லை. அப்பாவிற்கு படத்தை காட்டலாம் என்று நடிகர் அருண்விஜய் கூறினார். கோவிட் மூலமாக அப்பா இறந்தது வருத்தம் தான். ஹரிதாஸ் படத்தை பார்த்து விட்டு அப்பா பாராட்டினார். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு இருக்கும் என்றார். இது போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=ywTMYHElzns இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.