மைசூரு : நஞ்சன்கூடின், ராமசாமி லே — அவுட்டில், பெண் ஒருவரை கை, கால்களை கட்டிப்போட்ட மர்ம கும்பல், பாலியல் பலாத்காரம் செய்வதாக மிரட்டி, 200 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.மைசூரு, நஞ்சன்கூடின், ராமசாமி லே — அவுட், முதல் பிளாக்கில் வசிக்கும் ஷம்புசாமி, உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி தாட்சாயிணி. நேற்று காலை கணவர், பணிக்கு சென்ற பின், 8:30 மணியளவில், மனைவி தனியாக வீட்டில் இருந்தார்.
அப்போது கதவு தட்டப்பட்டது. வெளியே இருந்த மர்மநபர்கள், ‘பார்சல் வந்துள்ளது’ என, ஏதோ பார்சலை காண்பித்தனர். இதை நம்பி தாட்சாயிணி கதவை திறந்தார்.அவரை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அவரது கை, கால்களை கட்டிப்போட்டு, வாயில் ‘பிளாஸ்டர்’ ஒட்டினர். கூச்சலிட்டால் பலாத்காரம் செய்வதாக மிரட்டினர். அவர் அணிந்திருந்த தங்கத்தாலி செயின், வளையல், மோதிரம், பீரோவிலிருந்த நகைகள் உட்பட, 200 கிராம் எடையுள்ள தங்க நகைகளை, கொள்ளையடித்து தப்பியோடினர்.தகவலறிந்து அங்கு வந்த, நஞ்சன்கூடு ஊரக போலீசார், ஆய்வு செய்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவத்தால், அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement