மட்டக்களப்பு வாவியில் மக்களை அச்சுறுத்திய இராட்சத முதலை

 

மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலாக இருந்த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு குமண காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முதலைகளைப் பிடிக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்ததற்கு இணங்க, வியாழக்கிழமை (15) இரவு குறித்த ஆற்றுப் பகுதிக்கு வந்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் Copau;fs; முதலையைப் பிடிப்பதற்கு இரும்புக் கூடு வைத்தனர்.

இந்நிலையில் வைத்த கூட்டுக்குள் அகப்பட்ட குறித்த முதலையை வெள்ளிக்கிழமை (16) ஆற்றுக்குள்ளிருந்து வெளியில் கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட முதலையை குமண காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று விடவுள்ளதாக அத்திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.