விஜயகாந்த்தை நேரில் சந்தித்த இயக்குனர் சங்க குழு

தமிழ் சினிமாவில் 1980 லிருந்து 2009 வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விஜயகாந்த். அவர் நடிப்பில் கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், சேதுபதி ஐபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடைசியாக விருதகிரி என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் நுழைந்து விட்டார் விஜயகாந்த். அதன்பின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக திரைத்துறையினர் அவரை அவ்வப்போது நேரில் சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கமாகி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், விக்ரமன், பேரரசு, ரவி மரியா உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்து உள்ளார்கள். இது குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.