புதுடில்லி: ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை (செப்.,27) ஜப்பான் செல்ல உள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது.
அதன்படி நாளை (செப்.,27) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் செய்கிறார். ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி தனியாக சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு நாளுக்கும் குறைவாகவே ஜப்பானில் பிரதமர் மோடி இருக்க உள்ளார்.
புதுடில்லி: ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை (செப்.,27) ஜப்பான் செல்ல உள்ளார்.ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்