குஜராத்தில் திறப்பு விழாவிற்கு முன்பே சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த புதிய பாலம்!!

குஜராத் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று, திறப்பதற்கு முன்பே இடிந்து சீட்டுக்கட்டுப்போல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் மிக முக்கிய மாவட்டமான ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் சவுக்கில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தநிலையில், நேற்று திடீரென இடிந்து சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

तब कलकत्ता (अब गुजरात के आनंद) में पुल गिरना एक्ट ऑफ गॉड नहीं एक्ट ऑफ फ्रॉड है: नरेंद्र मोदी

मोदी जी के गुजरात मॉडल का पुल फ़ीता काटने से पहले ही गिर गया!
pic.twitter.com/UXImg5a2o6
— Surendra Rajput ‏ (@ssrajputINC) September 29, 2022

இந்த மேம்பாலத்தின் அடியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், மேம்பாலம் இடிந்து விழுந்த வீடியோவை பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திலேயே இதுபோன்று நடந்துள்ளதாக, காங்கிரஸ் தேசிய ஊடக குழு உறுப்பினர் சுரேந்திர ராஜ்புத் விமர்சித்துள்ளார்.
மேலும், ‘இது கடவுளின் செயல் அல்ல, மோசடிகளின் செயல் இது’ என்றும் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் ‘மோடியின் குஜராத் மாடலின் வழியில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்தது” என்றும் அதில் ராஜ்புத் குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.