எய்ம்ஸ் குறித்து தவறான தகவல் – ஜெபி.நட்டா மீது காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கடந்த சில தினங்கள் முன்பு மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்தது எனக் கூறியதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் 95 சதவீதம் நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று … Read more

`நீதிபதி எஸ்.முரளிதரை இடமாற்றம் செய்க’-ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்த உச்சநீதிமன்ற கொலிஜியம்

ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யும்படி குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்த முரளிதர் சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் படித்து, பின்னர் சென்னை பல்கலைகழகத்தில் சட்டபடிப்பை முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 1984ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து, வழக்கறிஞர் … Read more

காஷ்மீர் பஸ் ஸ்டாண்டில்அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்பு| Dinamalar

உதம்பூர் :ஜம்மு – காஷ்மீர் பஸ் ஸ்டாண்டில், நேற்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து பஸ்கள் சேதம் அடைந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில், உதம்பூர் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில், நேற்று அதிகாலை ௫:௩௦ மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், பஸ்சின் மேற்கூரை மற்றும் பின்பகுதி கடும் சேதமடைந்தது. இதையடுத்து, ஒரு … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு? ஜி23 குழு தலைவர்கள் நள்ளிரவில் திடீர் ஆலோசனை!

ஜெய்ப்பூர், காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா இல்லத்தில் நேற்றிரவு அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி பிருத்விராஜ் சவான், முன்னாள் மத்திய மந்திரி மணிஷ் திவாரி உள்ளிட்ட ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா நேற்றிரவு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தங்கியுள்ள ஜோத்பூர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பேசினார். இந்நிலையில், … Read more

வாழ்த்து கூறிய விராட் கோலிக்கு பெடரர் அளித்த பதில் என்ன..?

பெர்ன், சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் ஓய்வு முடிவை அறிவித்தார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவருக்கு பல்வேறு நபர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏடிபி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரோஜர் பெடரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் டென்னிஸ் விளையாடுவதை நேரடியாக பார்க்கும் … Read more

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

யாங்கூன், மியான்மரில் இன்று காலை 3.52 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது. பர்மாவின் வடமேற்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : மியான்மர் … Read more

12 இளம் கதை சொல்லிகளை கண்டறிந்த டெய்லி ஹன்ட், ஏஎம்ஜி மீடியா!!

உள்ளூர் செய்திகள் அடங்கிய இந்தியாவின் முதல் இணையதளமான டெய்லி ஹன்ட், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஸ்டோரி ஃபார் குளோரி #StoryForGlory என்ற பெயரில் அறிவுத்தேடல் நிகழ்ச்சியை நடத்தின. ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட கதைசொல்லிகளுக்கான இறுதி தேர்வு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதில் வீடியோ மற்றும் அச்சு என இரண்டு பிரிவுகளில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி கடந்த … Read more

வரிசை கட்டி வரும் பண்டிகை.. 2 மடங்கு கட்டணம் உயர்த்தியது ரயில்வே..!

ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரிசையாக வரவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி … Read more