திருமணம் ஆகாத பெண்களுக்கும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உள்ளது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில், 25 வயதான, திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஒருமித்த உறவின் விளைவாக தான் கர்ப்பம் அடைந்ததாகவும், 23 வாரங்கள் மற்றும் 5 நாட்களான கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்குமாறும் கோரினார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கு … Read more

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு; பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், நிபந்தனை ஜமீனில் வெளியே வந்த  பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி  விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அவர்களிடம் போலீசார் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, 5 … Read more

பாப்புலர் பிரன்ட் டிவிட்டர் முடக்கம்

புதுடெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில்,, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ5.2 கோடி நஷ்டஈடு செலுத்த உத்தரவு: பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் கைதை கண்டித்து, கேரளாவில் இந்த அமைப்பினர் சில தினங்களுக்கு … Read more

போதைப் பொருள் கடத்தல்127 வழக்குகள், 175 பேர் கைது| Dinamalar

புதுடில்லி :நாடு முழுதும் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள குழுக்களை கண்காணித்து கைது செய்வதற்காக, ‘ஆப்பரேஷன் கருடா’ என்ற அதிரடி நடவடிக்கையில் சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பஞ்சாப், புதுடில்லி, ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூர், … Read more

சென்னையில் சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள் – 2% அபராத தளர்வு சலுகை யாருக்கு? 

சென்னை: சென்னையில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2 சதவீத தனி வட்டி விதிக்கும் நடைமுறையில் ஒருமுறை மட்டும் தளர்வு அளித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து சென்னையில் குடிநீர் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையில் புதிய சொத்து வரியை … Read more

பாலியல் புகார் தெரிவித்த ஊட்டி அரசு கல்லூரி உதவி பேராசிரியை இட மாற்றம்: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

ஊட்டி:  ஊட்டி அரசு கலை கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றுபவர் பிரவீணாதேவி. நேற்று முன்தினம் இவரை  திருப்பூர் மாவட்டம் காங்கயம் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வந்துள்ளது. இது தொடர்பாக பிரவீணாதேவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘கடந்த பிப்ரவரி மாதம் உதவி பேராசிரியர் தர்மலிங்கம் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர், எஸ்பி, கல்லூரி கல்வி இயக்குநரகம், மண்டல இயக்குநர், கல்லூரி கல்வி … Read more

பட்டினி, வேலையின்மை கொண்ட நாடு இந்தியா: ஒன்றிய அமைச்சர் கட்கரி சர்ச்சை

நாக்பூர்: நமது நாடு பட்டினி, வேலையின்மை, உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஏழை மக்கள் வாழும் பணக்கார நாடு என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ராஷ்ட்ரிய சேவா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கட்கரி பேசியதாவது: உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. ஏழை மக்கள் தொகை … Read more

சிறு சேமிப்பு திட்டம்: வட்டியை உயர்த்தியது அரசு| Dinamalar

புதுடில்லி, மத்திய அரசு, சிறு சேமிப்பு திட்டங்கள் சிலவற்றுக்கான வட்டியை, 30 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்த்தி அறிவித்துள்ளது.இது குறித்து, மத்திய நிதிஅமைச்சகத்தின் அறிக்கை:சிறு சேமிப்பு திட்டங்கள் சிலவற்றில், மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம், 30 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான வைப்புத் தொகை வட்டி, 5.5 சதவீதத்தில் இருந்தது, 5.8 சதவீதமாக உயர்கிறது.மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி, அக்டோபர் – டிசம்பர் காலத்தில், 20 அடிப்படை புள்ளிகள் உயர்கின்றன. … Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தடை விதித்தது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன் ஆவேசம்

கோவை: உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான திமுக அரசின் நடவடிக்கை கடும் … Read more

சானிட்டரி நாப்கின் விவகாரம்: தமிழ்நாடு அதிலும் முன்னோடிதான்!

“ஆணுறைகளையும் கூட அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள் போல?” இது சாமானியர் ஒருவர் பேசியது கிடையாது. ஐஏஎஸ் படித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் பெண் இயக்குநர் ஒருவர் கூறியது. அதுவும், பள்ளி மாணவி ஒருவர் குறைந்த விலை நாப்கின்கள் பற்றிய கேள்விக்குதன் அவர் இப்படி பதிலளித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ‘அதிகாரம் பெற்ற மகள்கள்; வளமான பீகார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும், ஐஏஎஸ் … Read more