அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் என்ன விலை தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று (அக்.3-ம் தேதி) ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து 37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (அக்.4-ம் தேதி) சவரனுக்கு அதிரடியாக 560 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, ஒருகிராம் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து, 4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிலோ வெள்ளி 66,700 ரூபாயாகவும், ஒருகிராம் வெள்ளி 66 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.