அரசியல் யாப்பை பாதுகாப்பது சமகால அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடக அமைச்சருமான, அமைச்சரவை பேச்சாளருமான, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாடு நிலைத்திருப்பதற்காக மூன்று நிறுவனங்கள் இருப்பதாகவும் தெரிவித்த அவர் அரசியல் யாப்பு, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை என்ற 3 ஆகும்.
இந்த 3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் மீது அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் மேற்கொள்ளபடுமாயின், அவர்களுக்கு சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்படுத்தப்படுமாயின், அதனை தடுப்பதற்கு அரசாங்கம்; செயல்படுவதாகவும், அமைச்சர் கூறினார்.
பாதுகாப்பு வலையங்களை ஏற்படுத்தல், நீக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், எதிர்காலத்தில் அதியுயர் பாதுகாப்பு வலையம் ஏற்படாது என்றும் அதற்கு பதிலாக அரசியல் யாப்பு மற்றும் பொது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு புதிய சட்ட விதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.