கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்று பொதி ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு மானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேனீர் மற்றும் அப்பம் போன்றவற்றின் விலை உயர்த்தப்படாது என அவரமேலும் தெரிவித்துள்ளார்.