கல்வித்துறை திடீர் உத்தரவு; பள்ளி ஆசிரியர்கள் ஹேப்பி!

தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்வித் துறை மூலம் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதன் நிர்வாகம் பள்ளிக் கல்வி துறையிடம் இருந்தாலும் பள்ளிகளின் வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தான் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடைபெற்று வந்தது.

அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் 2,381 எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்த ஆண்டு முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக கடந்த ஜூன் மாதம் திடீரென அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றது. மேலும் மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படும் என, அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் கடந்த ஜூன் மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் சேர்ந்து ஆர்வமுடன் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு முழுவதும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ரூ.5000 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வி துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமனம் செய்ய தமிழக அரசு ரூ.13.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதிரடியாக உத்தரவு போட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் 2381 மழலையர் பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதோடு, ரூ. 5000 தொகுப்பூதியத்தில் 2381 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் மழலையர் பள்ளிகள் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.