திருப்பூர்: நித்யானந்தா என நினைத்து, அவரது தோற்றத்தில் இருந்தவரின் ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக கூறி பல்லடம் காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா எனபவர் இன்று புகார் அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்துக்கு நேற்று சொகுசு காரில் நித்யானந்தா தோற்றத்தில் சாமியார் ஒருவர் வந்திறங்கினார். அவர் பெயர் பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரத்தை சேர்ந்த இவர், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிக பணி மேற்கொண்டு வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பணியில் இருந்தார்.
அங்கு கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில், 25 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளித்தார். இந்நிலையில், ஆசிரமக் கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக வெளியூர் சென்றிருந்த பாஸ்கரானந்தாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதையடுத்து பல்லடம் காவல் நிலையத்தில் நேற்று ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நித்யானந்தா போல் போல் இருப்பதால், என் ஆசிரமம். மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது” என அவர் தெரிவித்தார்.