அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு ஒத்திவைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி மீண்டும் இவ் விவாதம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (6) பிற்பகல் சபையில் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22 வது திருத்தம் தொடர்பில் இன்றும் (6) நாளையும் (7) விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.