மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னணி தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ- எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக ஜெய்ஷா ஆகியோர் 2019ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டனர். இவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து புதிய தலைவர்களுக்கான தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடக்கிறது. இதில் 13ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 14ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும் .
இந்நிலையில் பிசிசிஐ தேர்தலில் சவுரவ் கங்குலி மீண்டும் நிற்கபோவதில்லை எனவும் , கங்குலி ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவரான ரோஜர் பின்னி, பிசிசிஐன் அடுத்த தலைவராக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement