திம்மையன்பேட்டை ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணி க.சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் திம்மையன்பேட்டை ஊராட்சியில் புதுப்பேட்டை செல்லும் சாலையையொட்டி உள்ள பகுதிகளில் லேசாக மழை பெய்தாலே மழைநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தரவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதை ஏற்று, மாவட்ட கவுன்சிலர் பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு பணியை க.சுந்தர் எம்எல்ஏ நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த பணிகளை தரமாகவும், மழைநீர் தேங்காத நிலையில் கட்டப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் எம்எல்ஏ வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் கமலா சண்முகம், சஞ்சய்காந்தி, உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ விமல், ஒன்றிய திமுக நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, இன்பரசு, நவநீதகிருஷ்ணன், குமரன், சம்பத், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.