அமைக்காத கால்வாய்க்கு ரூ.4.8 லட்சம் செலவானதாக சுவரொட்டி? கொந்தளிக்கும் சூளகிரி மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் கால்வாய் அமைத்ததாக லட்சக்கணக்கில் செலவினங்கள் சுவற்றில் எழுதியதால் ஊராட்சி நிர்வாகம் மோசடி செய்ததாக மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயர்ணப்பள்ளி கிராமத்தில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. ஓசூர் – தருமபுரி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த நகரில் சாலையோரமாக உள்ள காந்தி நகர் பகுதியில் குடியிருப்புகளின் வீடுகளின் கழிவுநீர் வெளியேற்ற சாக்கடை வசதியில்லாததால் சாலையிலேயே கழிவுநீர் வெளியேறி வருகிறது.
image
இந்த நிலையில் இந்த பகுதியில் சுமார் 850 மீட்டர் அளவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு 15 வது ஊதியம் நிதி குழு மானியத்தில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான பணிகள் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் சாலையோரமாக 4,79,999 ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் என அப்பகுதியின் உள்ள ஒரு வீட்டின் சுவற்றின் மீது எழுதப்பட்டதை அறிந்த கிராம மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் ஊராட்சி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்image
தற்போது அந்த ஒப்பந்ததாரர் சுவற்றில் மதிப்பீடு குறித்து எழுதியதை பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சூளகிரி ஊரக வளர்ச்சி அலுவலகத்தின் அலுவலர் கோபாலகிருஷ்ணனை தொடர்பு கொண்ட கேட்டபோது. “இங்கு கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு டெண்டர் மட்டும் விடப்பட்டுள்ளது. பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான நிதியும் வழங்கப்படவில்லை. பணிகள் முடிந்த பிறகு தான் அதற்கான நிதி வழங்கப்படும். ஒப்பந்ததாரர் வேறு இடத்தில் பணி முடிந்த போது சுவரொட்டி எழுதியபோது, இந்தப் பகுதியிலும் சேர்த்து சுவரொட்டி எழுதியுள்ளார். இதுதான் சர்ச்சைக்குள்ள விஷயமாக மாறி உள்ளது. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை, இந்த பகுதியில் வரும் திங்கட்கிழமை அன்று கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி துவங்கப்படும்” என தெரிவித்தார்.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/5hZZM2kXUMA” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.