இந்து கடவுள்களை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப இராமானுஜ ஜீயர் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோயிலில் நேற்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருவேங்கட பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றும் இந்து மதத்தை அவதூறாக பேச இப்போது நிறைய பேர் கிளம்பியுள்ளதாக கூறியுள்ளார். ஆ.ராசா போன்றவர்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அருகில் வைத்துக் கொண்டால் அவருக்கு தான் கெட்டபெயர் உண்டாகும்.
மேலும், இந்து கடவுள்களை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.