திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம், ஏளாவூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இதனால் காலையில் செல்லும் ரெயில்களில் மாணவர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இதனை தொடர்ந்து கல்லூரி முடிந்து மாலையில் வீடு திரும்பும் மாணவர்களிடையே ரெயிலில் செல்லும் போது யார் பெரியவர் என்ற மோதல் ஏற்படுகிறது.
இதனால், கல்லூரி மாணவருடன் சில இளைஞர்களும் சேர்ந்து பட்டாக்கத்தியுடன் ரெயிலில் பயணித்து வந்த நிலையில், அத்திப்பட்டு, புதுநகர் ரெயில் நிலையங்களில் ஒரு மின்சார ரெயிலில் சில மாணவர்கள் பட்டாக் கத்தியை நடைமேடைகளில் உரசிக்கொண்டு பாடல் பாடி வந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது. இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது..