திருநெல்வேலி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாளன்குளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் கொம்பதாஸ் (14) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கொம்பதாஸ் நேற்று இரவு பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அறைக்கு தூங்க சென்றுள்ளார்.
இதையடுத்து இன்று அதிகாலை ஒரு மணி அளவில் கொம்பதாஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சீதபற்பநல்லூர் போலீசார் கொம்பதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொம்பதாஸ் கடந்த சில நாட்களாக அதிக நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கொம்பதாஸ் மன வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.