வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேன்பெரா: நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு இந்தியாவின் மூவர்ணம் வெளிப்படும் வகையில் பார்லிமென்ட் இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் தூதரக துணை அலுவலகத்தை திறந்து வைத்த அவர், நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றினார். தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு இந்தியாவின் மூவர்ணம் வெளிப்படும் வகையில் பார்லிமென்ட் இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து ஜெய்சங்கர் தெரிவிக்கையில், ‘மூவர்ண வரவேற்புடன் கேன்பெரா வந்தடைந்து உள்ளேன். ஆஸ்திரேலியாவின் பழைய பார்லி., இல்லம் நம்முடைய தேசிய வண்ணத்தில் காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு நடைபெற்ற 13வது இந்திய – ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement