வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி லலித் பரிந்துரை செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக லலித் பதவி வகித்து வருகிறார். இவர் வரும் நவ., 8ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு, தலைமை நீதிபதி லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.
ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதன்படி, அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை இன்று தலைமை நீதிபதி லலித் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பினார்.

சந்திரசூட்:
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதிகாக வரும் நவ., 9ம் தேதி பதவியேற்க உள்ள சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி என்னும் சிறப்பை பெற உள்ளார். இவர் வரும் 2024ம் ஆண்டு நவ., 10ம் தேதி வரை அப்பொறுப்பில் இருப்பார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement