கன மழை காரணமாக இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 11) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார்.