“குஜராத் தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என பயப்படுகிறது!" – ராஜினாமா செய்த டெல்லி அமைச்சர் தாக்கு

அக்டோபர் 5-ம் தேதி அன்று, டெல்லி ஜாண்டேவாலனிலுள்ள டாக்டர் அம்பேத்கர் பவனில் சுமார் 10 ஆயிரம் இந்துக்கள், புத்த மதத்துக்கு மாறினர். இந்த நிகழ்ச்சியில், டெல்லி மாநில சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு பா.ஜ.க, “ஆம் ஆத்மி கட்சி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது” எனக் குற்றம்சாட்டியிருந்தது. அதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பால் கௌதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், அவர் டெல்லி காவல்துறையால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம், “நான் கைதுசெய்யப்பட்டால் பா.ஜ.க-வுக்கு இனிப்புகள் அனுப்புவேன். போலீஸ் விசாரணையில் அரசியல் சாசனத்தில் பதிவான 22 சத்திய பிரமாணங்களையும் காண்பிப்பேன். என்னைச் சுற்றி நடக்கும் முழு சர்ச்சையும் குஜராத்தில் பா.ஜ.க தோல்வியடையும் என பயந்துவிட்டதற்கான அடையாளம்.

பாஜக

எனக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்ட நோட்டீஸில், அந்த நிகழ்வு தொடர்பான ஆவணங்களை எடுத்துக்கொண்டு பஹர் கஞ்ச் காவல் நிலையத்திற்கு (இன்று) மதியம் 2 மணிக்கு வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனக்கு சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. நான் காவல் நிலையத்திற்குச் சென்று அனைத்து ஆவணங்களையும் காண்பிப்பேன். எனக்கு எதிராக பா.ஜ.க வதந்திகளை பரப்புகிறது” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.