
கேப்டன் மில்லர் : முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் 11 நாட்கள் நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். அடுத்தக்கட்ட படிப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் வேலைகள் நடக்கின்றன. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.