சிறுவனுக்கு ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்த கல்லூரி மாணவி! மூன்று மாத கர்ப்பம்..போக்சோவில் கைது


17 வயது சிறுவனை திருமணம் செய்து மூன்று மாத கர்ப்பமான 20 வயது இளம்பெண் சிறையில் அடைப்பு

ரகசியமாக குடும்பம் நடத்தி வந்த மாணவ, மாணவி கிருஷ்ணகிரியில் பிடிபட்டனர்  

தமிழக மாவட்டம் சேலத்தில் மாயமான திருமண வயதை அடையாத கல்லூரி மாணவனை சக மாணவி திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அரங்கனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இரண்டு ஆண்டுகள் தாமதமாக பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

குறித்த மாணவிக்கு அவருடைய சக மாணவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மாணவருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த மாணவன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸாரால் மாணவனை கண்டுபிடிக்க முடியாததால், மாணவனின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த மாணவன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சிறுவனுக்கு ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்த கல்லூரி மாணவி! மூன்று மாத கர்ப்பம்..போக்சோவில் கைது | College Student Arrested Who Married Minor Boy Tn

அங்கு விரைந்த பொலிஸார் மாணவனையும், அவருடன் தங்கியிருந்த இளம்பெண்ணையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த இளம்பெண் மாணவருடன் படித்து வந்ததும், ஆசை வார்த்தைக் கூறி திருமண வயதை எட்டாத மாணவரை திருமணம் செய்து கர்ப்பமானதும் தெரிய வந்துள்ளது.

விசாரணைக்கு பின்னர் குறித்த மாணவி போக்சோ, இளம் வயது திருமணம் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.