மதுரை : தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்குகளை விசாரிப்பதால் அதிக பளு எனவும், தனி விசாரணைப் பிரிவை உருவாக்குவது சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கு சுமையை குறைக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.