தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.
டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி வெறும் 99 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர், பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 19 புள்ளி ஒரு ஓவர்களில் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 49 ரன்கள் எடுத்தார்.