வெலிங்டன், நியூசிலாந்தின் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 500 ‘பைலட்’ திமிங்கலங்கள் உயிரிழந்தன.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில், பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.
நியூசிலாந்து நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள சாத்தம் தீவில் கடந்த 7ம் தேதி 250 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. மூன்று நாட்களுக்கு பின் அருகே உள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.
இவை கரை ஒதுங்குவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஒருவேளை உணவுக்காக அந்த திமிங்கலங்கள் கரையை ஒட்டியுள்ள பகுதிக்கு வந்து கரை ஒதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த கடல் பகுதியில் வசிக்கும் வெள்ளை சுறாக்கள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், திமிங்கலங்களை மீண்டும் கடலில் இழுத்து சென்று விடும் பணி கைவிடப்பட்டது. நீரிழப்பு காரணமாக திமிங்கலங்கள் கரையிலேயே உயிரிழக்க துவங்கின. எஞ்சிய திமிங்கலங்கள் அவதியுறுவதை தவிர்ப்பதற்காக, அவை கருணை கொலை செய்யப்பட்டன.
சாத்தம் கடல் பகுதியில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது புதிதல்ல. 1918ல், 1,000 திமிங்கலங்களும், 2017ல் 700 திமிங்கலங்களும் கரை ஒதுங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement