மாஸ்கோ,’இன்ஸ்டாகிராம்’ மற்றும் ‘பேஸ்புக்’ சமூகவலைதளங்களின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’வை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா அறிவித்தது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்ளை அதன் தாய் நிறுவனமான மெட்டா நிர்வகித்து வருகிறது.
இதன் தலைவராக மார்க் ஸக்கர்பர்க் பதவி வகித்து வருகிறார். இந்த இரு சமூக வலைதளங்களும் ரஷ்யாவில் மிக பிரபலமாக உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பல வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே போர் துவங்கிய பின், ரஷ்யாவுக்கு ஆதரவான வலைதள பதிவுகளை பேஸ்புக் கட்டுப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தன.
மேலும், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக வன்முறைக்கு அழைப்புவிடுத்து உக்ரைனில் இருந்து வெளியிடப்படும் பதிவுகளை மெட்டா நிறுவனம் தற்காலிகமாக அனுமதித்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுக்கு ரஷ்யா தடை விதித்தது.
ஆனால், வி.பி.என்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஷ்ய மக்கள் அந்த இரண்டு சமூக வலைதளங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த இரு சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement