ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் செப்டம்பர் 9-ம் தேதி காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
இதையடுத்து எலிசபெத் மகனான சார்லஸ், மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சார்லஸ் முடிசூட்டு விழா எப்போது என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், வரும் 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி முடிசூட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளதாக அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement