சென்னை: அதிமுக நிர்வாகிகள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்பட 12 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 12 பேரும் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.